» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனைத்து தரப்பு மக்களுக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் பயன்: அமைச்சர் பெருமிதம்!!

சனி 9, ஆகஸ்ட் 2025 5:32:36 PM (IST)



அனைத்து தரப்பட்ட பொதுமக்களுக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் பயனுள்ளதாக இருக்கிறது என்று பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட பொதுமக்களுக்கு வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட சித்திரங்கோடு பகுதியில் அமைந்துள்ள டிரினிட்டி சென்ட்ரல் பள்ளி வளாகத்தில் இன்று (09.08.2025) நடைபெற்ற முகாமினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி, பார்வையிட்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ சேவையை அவர்களின் இடத்திற்கே கொண்டு செல்லும் நோக்கில், "நலம் காக்கும் ஸ்டாலின்" என்ற மாபெரும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 02.09.2025 அன்று தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் தமிழ்நாட்டிற்குட்பட்ட நகர்ப்புற மற்றும் ஊரக பகுதி மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாம்களின் தொடர்ச்சியாக, மக்கள் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு சென்று அதிக செலவு செய்வதை தவிர்க்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதே முக்கிய இலக்காகும்.

அதனடிப்படையில் இன்று பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட பொதுமக்களுக்கு சித்திரங்கோடு டிரினிட்டி சென்ட்ரல் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முகாமில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், எக்ஸ் ரே, இசிஜி, எக்கோ உட்பட முழு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 17 வகை நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்களை கொண்டு, பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய் தீவிரம் உள்ளவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சை மேற்கொள்ள உரிய வழிவகை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளுக்கு அருகாமையில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் – முழு உடல் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

முகாமில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.சுரேஷ் பாலன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு.சகாய ஸ்டிபன் ராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அரவிந்த் ஜோதி, திருவட்டார் வட்டாட்சியர் மரகதவல்லி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.அருண், பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி தலைவர்கள் சுஜீர் ஜெபசிங்குமார் (வேர்கிளம்பி), பெனிலா ரமேஷ் (திருவட்டார்), பீனா அமிர்தராஜ் (ஆற்றூர்), ஜான் கிறிஸ்டோபர் (குமாரபுரம்), துணைத்தலைவர் துரை ராஜ் மனுவேல், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர் ஆரோக்கிய மேரி ரெஜினி, துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory