» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தி.மு.க. இலக்கிய அணி தலைவராக அன்வர் ராஜா நியமனம்: துரைமுருகன் அறிவிப்பு
சனி 9, ஆகஸ்ட் 2025 3:47:07 PM (IST)
தி.மு.க. இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அ. அன்வர் ராஜா, சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தார். தற்போது அவருக்கு தி.மு.க.வில் இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: புலவர் இந்திரகுமாரி வகித்து வந்த தி.மு.க. இலக்கிய அணி தலைவர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா நியமிக்கப்படுகிறார். தி.மு.க. சட்ட திட்ட விதி 31, பிரிவு 10-ன்படி தி.மு.க. இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 5:52:35 PM (IST)

வாக்காளர்கள் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்: ஆட்சியருடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வாக்குவாதம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 5:07:32 PM (IST)

தமிழகத்தில் ரூ.69 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்!
திங்கள் 8, டிசம்பர் 2025 5:02:03 PM (IST)

முக்தாரை கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் : சரத்குமார் எச்சரிக்கை!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:03:30 PM (IST)

குமரி மாவட்டத்தில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
திங்கள் 8, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

குமரி பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் பதவியேற்பு விழா : பிரதம பேராயர் ரூபன் மார்க் பங்கேற்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 10:37:57 AM (IST)










