» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போலீசார் வாகனத்தை பறித்ததால் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சனி 14, ஜூன் 2025 8:27:24 PM (IST)
கன்னியாகுமரியில் போலீசார் வாகனத்தை பறித்ததால் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இடலாகுடியை சேர்ந்த விஷ்ணுநிதி (29) என்ற வாலிபரின் இருசக்கர வாகனத்தை கன்னியாகுமரி போலீசார் பறித்துச் சென்று திருப்பி கொடுக்க மறுத்ததால், கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் நடுரோட்டில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ குளித்து தற்கொலை முயன்றார்.
இதையடுத்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த விஷ்னுநிதி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த வாலிபரின் உறவினர்கள் நீதி கேட்டு போராட இருப்பதாக தகவல் வெளியானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஜித்குமாரை போல 24 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளிக்காதது ஏன்? விஜய் கேள்வி
ஞாயிறு 13, ஜூலை 2025 6:38:22 PM (IST)

அதிமுக - பாஜக கூட்டணிக்கு டெபாசிட் கூட கிடைக்காது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஞாயிறு 13, ஜூலை 2025 6:30:36 PM (IST)

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
ஞாயிறு 13, ஜூலை 2025 11:05:42 AM (IST)

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25-ம் தேதி கமல்ஹாசன் பதவி ஏற்பு!
சனி 12, ஜூலை 2025 5:16:32 PM (IST)

குரூப் 4 தேர்வு வினாத்தாள் எதுவும் கசியவில்லை: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் பேட்டி
சனி 12, ஜூலை 2025 4:41:25 PM (IST)
