» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு திமுக அரசு இடையூறு : நயினார் நாகேந்திரன்

சனி 14, ஜூன் 2025 5:35:54 PM (IST)



தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு திமுக அரசு தடங்கல் ஏற்படுத்தி வருகிறது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில், ஜூன் 22-ம் தேதி மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 14) நடைபெற்றது. இதற்காக திருவாரூர் வருகை தந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பாஜ மாவட்டத் தலைவர் விகே.செல்வம் தலைமையில் விளமல் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து துர்காலயா சாலை, வடக்கு வீதி, கீழவீதி,தெற்கு வீதி வழியாக இரு சக்கர வாகன அணி வகுப்பு செய்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்ட மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்.

அங்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், பாஜக மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதற்கு தமிழக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர் எவ்வளவு தடங்கல்களை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு தடங்கல்களை ஏற்படுத்துகிறார்கள். தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை வைத்துதான் திமுக அரசியல் செய்துவருகிறது.

அந்த காலத்தில் அதெல்லாம் எடுபட்டது. தற்பொழுது அது எடுபடவில்லை. கீழடியை பொறுத்தமட்டில், ஏற்கெனவே சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில சான்றுகள் தேவைப்படுகிறது. தமிழுக்கு தொண்டு செய்வதுபோல் காட்டிக்கொண்டு, திமுக மீண்டும் ஆட்சிக்கு வர பார்க்கிறார்கள். வரும் தேர்தலில் அது எடுபடாது. விஜய் அரசியலுக்கு வந்ததால் யாருக்கு லாப, நஷ்டம் என்பது தேர்தல் முடிந்த பின்புதான் தெரியும்.

அதே நேரத்தில் திமுகவை ஆட்சியிலிருந்து இறக்க நினைக்கின்ற அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து தேர்தலில் நிற்க வேண்டும். மேலும், எங்களுடைய கூட்டணியில் தேமுதிக கண்டிப்பாக வரவேண்டும் அப்போதுதான், திமுகவை தோற்கடிக்க முடியுமென நான் கூறியுள்ளேன். அதுபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒருமித்த கருத்தோடு வரவேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறும். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்று கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors






CSC Computer Education



Thoothukudi Business Directory