» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் நிறுவனங்கள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்!

சனி 14, ஜூன் 2025 5:17:55 PM (IST)

சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என்று திருநெல்வேலி  மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் அவர்களால் 2022-23 ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது சட்டப் பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 2022- ஆம் ஆண்டிற்கான விருது வழங்குதல்” தனியார் / பொதுத்துறை / கூட்டுத் துறை நிறுவனங்களைச் சார்ந்த தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக (corporate Social Responsibility) தமிழ்நாட்டில் பல்வேறு சமூகப் பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் பாராட்டத்தக்க வகையில் ஈடுபடுவதை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் விருது வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, இவ்விருதானது 2022- ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படும். 

ரூபாய் ஒரு இலட்சம் பரிசுத் தொகையும், நற்சான்றிதழும் கொண்ட இவ்விருது ஒவ்வொரு வருடமும் மாவட்டத்திற்கு ஒரு விருது வீதம் 37 மாவட்டங்களிலும் சிறப்பாகப் பணி செய்த தலைசிறந்த தொழில் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

தகுதிகள்: பங்கு நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனிநபர் நிறுவனங்கள், அரசு / அரசு சார்ந்த நிறுவனங்கள், தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்புகள் இவ்விருதினைப் பெற விண்ணப்பிக்கலாம்.

இந்நிறுவனங்கள் நேரடியாகவோ, தங்களின் அற்க்கட்டளைகள்,தொண்டு நிறுவனங்கள் மற்றும் தங்களது இதர முகமைகள் மூலமாகவோ செயலாற்றலாம்.

தனித்துவமான அறக்கட்டளைகள் / தொண்டு நிறுவனங்கள் மற்றும் மன்றங்கள் சங்கங்கள் இவ்விருது பெற தகுதியற்றவை ஆகும்.

பரிசீலனைக்கான கூறுகள்: 

மேற்க்கண்ட நிறுவனங்களால் ஊரகப் பகுதிகளில் அந்தந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே விருது வழங்குவதற்க அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும்.

விவசாயம், கால்நடை, கல்வி, பொதுச் சுகாதாரம், குடீநீர் மழைநீர் சேகரிப்பு, மரபு சாரா எரிசக்தி, வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல், சுய உதவிக் குழுக்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு, பெண்கள், குழந்தைகள். இளைஞர் நலன், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய சேவைகளில் சிறப்பாக பங்கேற்கும் நிறுவனங்கள் விருதுக்கு பரிசீலிக்கப்படும், மேலும் பல்வேறு சமூக நல மேம்பாட்டுப் பணிகளும் விருது வழங்குவதற்கு பரிசீலிக்கப்படும்.

நிறுவனங்களின் கடந்த ஒரு நிதி ஆண்டின் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இவ்விருதுக்கு தேவையான விண்ணப்பம் www.tnrd.tn.gov.in. என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். எனவே, தகுதிவாய்ந்த நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை இணையதள வழி மட்டுமே தகுந்த ஆவணங்களுடன் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்ட 45 தினங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

இந்த விருதுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஊரக வளர்ச்சித் துறையின் அரசாணை (நிலை) எண்.80, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (பரா.2) துறை, நாள் 06.07.2022 – ல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பான இவ்விருதினைப் பெற தகுதியான தொழில் சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் விண்ணப்பம் செய்ய முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education

New Shape Tailors



Thoothukudi Business Directory