» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!
திங்கள் 2, ஜூன் 2025 11:31:56 AM (IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் இன்று தீா்ப்பளித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச. 23-ஆம் தேதி 19 வயதான 2ஆம் பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். இதுதொடா்பான புகாரின்பேரில் கோட்டூா்புரம் அனைத்து மகளிா் போலீஸாா் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து, அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூரைச் சோ்ந்த ஞானசேகரன் என்பவரை டிச. 24-ஆம் தேதி கைது செய்தனா்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து டிச. 28-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், ஞானசேகரனை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையா் ஜன. 5-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
பிப்ரவரி மாதம் ஞானசேகரனுக்கு எதிராக 100 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை கடந்த மாா்ச் 7-ஆம் தேதி சென்னை மகளிா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தமிழகத்தில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை மகளிா் நீதிமன்றம் கடந்த மே 28ஆம் தேதி தீா்ப்பளித்தது.
தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள 12 சட்டப் பிரிவுகளில் 11 சட்டப் பிரிவுகளின் கீழ் ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகள் அரசுத் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி எம். ராஜலட்சுமி அறிவித்தாா். எனவே, ஞானசேகரன் குற்றவாளி என அவா் தீா்ப்பளித்திருந்த நிலையில், இன்று ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி என அறிவிக்கப்பட்டபோது, உங்களது கருத்து என்ன என குற்றவாளி ஞானசேகரனிடம் நீதிபதி கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு ஞானசேகரன், தந்தை இறந்துவிட்டதால் தாயை கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனது 8- ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை மற்றும் மனைவியைக் காப்பாற்ற வேண்டும். மேலும், எனது தொழிலும் பாதிக்கப்படும். எனவே, எனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கண்ணீா் மல்க கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால், குற்றவாளி ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். கருணைக் காட்டக் கூடாது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து காட்டுமிராண்டித்தனமான குற்றம் செய்திருக்கிறாா். அவருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டிருப்பதை முன்னிட்டு, ஞானசேகரன் காவல் துறையின் பாதுகாப்புடன் சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் படிவங்களைப் பெறும் பணி நிறைவு: டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:47:13 AM (IST)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)










