» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுரை மேயரின் கணவர் தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்ட்!
வியாழன் 29, மே 2025 4:25:21 PM (IST)
மதுரையில், அமைச்சர் தியாகராஜன் தீவிர ஆதரவாளரான மேயரின் கணவர் திமுகவில் இருந்து இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
மதுரையில் ஜூன் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கட்சியின் பொதுக் குழு கூட்டம் நடக்கிறது. அதை முன்னிட்டு, மாவட்ட செயலாளர்களான அமைச்சர் மூர்த்தி, மணிமாறன், தளபதி ஆகியோர் மே 23ல் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினர். ஆனால் அதே நாள், அதே நேரத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை மேயர் இந்திராணி நடத்தினார்.
இந்த கூட்டத்தை தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். ஆனாலும் அ.தி.மு.க., ஆதரவுடன் கூட்டத்தை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றினார் மேயர் இந்திராணி. மேயரின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் அவரது கணவர் பொன்வசந்த் உள்ளார் என புகார்கள் எழுந்தன. இப்பப்பட்ட சூழலில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி பொன் வசந்த் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை உத்தங்குடியில் தி.மு.க., பொதுக்குழு கூட்டம் ஜூன் 1ம் தேதி நடக்கிறது. அதற்காக மே 31ம் தேதி முதல்வர் ஸ்டாலின் மதுரை செல்ல உள்ளார். இருநாள் நிகழ்வில் ரோடு ஷோ, பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)










