» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில் ஏப்.23ல் தீர்ப்பு : உயர்நீதிமன்றம் தகவல்
திங்கள் 21, ஏப்ரல் 2025 5:14:35 PM (IST)
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் வரும் 23-ம் தேதி (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் (மார்ச்) அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.1000 கோடி வரை முறைகேடு நடந்ததாக பரபரப்பாக கூறப்பட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறை நடத்திய இந்த சோதனையை சட்ட விரோதம் என்று அறிவிக்கக்கோரி தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சேர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, "சட்டத்தை மதிக்காமல் தங்கள் விருப்பப்படி அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். சில அதிகாரிகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் இரவில் தூங்கவிடவில்லை. இது மனித உரிமை மீறல்" என்று அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் வாதிட்டது.
ஆனால், அமலாக்கத்துறை சார்பில், "சட்டத்துக்கு உட்பட்டே இந்த சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. பெண் அதிகாரிகளை இரவில் தங்கவைக்கவில்லை" என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துவிட்ட நிலையில், வரும் 23-ந் தேதி (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளத்தில் பாஜகவின் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்: நயினார் நாகேந்திரன்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:50:14 PM (IST)

நூறு நாள் வேலை திட்டத்தை சிதைக்க முயற்சி : மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:46:47 PM (IST)

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:14:54 PM (IST)

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்: ஆட்சியர் அறிவிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:52:13 PM (IST)

கேரம் வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி ஊக்கத்தொகை : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
திங்கள் 15, டிசம்பர் 2025 3:12:06 PM (IST)

எஸ்ஐஆர் படிவங்களைப் பெறும் பணி நிறைவு: டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:47:13 AM (IST)










