» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் 17 வழித்தடங்களுக்கு புதிய பேருந்து சேவை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்

சனி 22, மார்ச் 2025 4:33:45 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 17 வழித்தடங்களுக்கு புதிய பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டலம் சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (22.03.2025) கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் கடைக்கோடி குக்கிராமங்களுக்கும் தேவையான, தரமான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட போக்குவரத்து சேவையினை தொடர்ந்து வழங்கி வருகிறது. 

மேலும் தனியார் பேருந்துகளுக்கு இணையாக குறைந்த கட்டணத்தில் நவீன பேருந்துகள் இயக்கப்படுவதோடு, மேலும் நிதியாண்டில் ஏற்கெனவே அறிவித்துள்ளபடி, 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட ரூ.1,031 கோடி மற்றும் பயன்பாட்டிற்கு உகந்த 750 பேருந்துகளை முற்றிலும் புதுப்பித்து இயக்குவதற்காக 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 52 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்றைய தினம் 17 பேருந்துகள் பிற மாவட்டங்களான விருதுநகர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு வழித்தடங்களில் புதிய பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து துறை மூலமாக நமது மாவட்டத்தில் பெரிய பேருந்துக்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கும், புதிய பேருந்து வழித்தடம் அமைத்து மினிபேருந்துக்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் பொதுமக்கள் சிரமமில்லமால் பயணம் மேற்கொள்ளமுடியும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் த.மனோ தங்கராஜ் (பத்மநாபபுரம்), செ.ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), மண்டல பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி, துணை மேயர் மேரி பிரின்சிலதா, துணை மேலாளர்கள் ஜெரோலின் (வணிகம்), சுனில் குமார் (இயக்கம்), அழகேசன் (தொழில்), தொழிற்சங்க தலைவர் சிவன், மாநகராட்சி உறுப்பினர்கள் கலாராணி, அமலசெல்வன், ஸ்டாலின் பிரகாஷ், சுரேஷ், துறை அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital





New Shape Tailors

CSC Computer Education




Thoothukudi Business Directory