» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக வெற்றிக் கழகம் நெல்லை மாவட்ட செயலாளர் அந்தோணி சேவியர் திடீர் மரணம்!
சனி 15, மார்ச் 2025 3:43:19 PM (IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி என்கிற அந்தோணி சேவியர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற் கட்சியை தொடங்கி தீவிரமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தவெகவில் அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்ள் பிரிக்கப்பட்டுள்ளன. 95 கட்சி மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் அண்மையில், கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை விஜய் அறிவித்தார்.
இன்னும் 6 மாவட்டங்களில் மாவட்ட பொறுப்பாளர்களை நியமிப்பதில் இழுபறி நீடிக்கிறது. விரைவில் அந்த மாவட்டங்களுக்கும் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுப்பாளர்களை நியமனம் செய்வதில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்தகட்டமாக கட்சியின் பொதுக்குழு வருகிற 28ஆம் தேதி கூடுகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி என்கிற அந்தோணி சேவியர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். கட்சி பணிகளுக்காக சென்னை வந்திருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி மறைவால் அக்கட்சி தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளத்தில் பாஜகவின் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்: நயினார் நாகேந்திரன்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:50:14 PM (IST)

நூறு நாள் வேலை திட்டத்தை சிதைக்க முயற்சி : மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:46:47 PM (IST)

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:14:54 PM (IST)

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்: ஆட்சியர் அறிவிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:52:13 PM (IST)

கேரம் வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி ஊக்கத்தொகை : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
திங்கள் 15, டிசம்பர் 2025 3:12:06 PM (IST)

எஸ்ஐஆர் படிவங்களைப் பெறும் பணி நிறைவு: டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:47:13 AM (IST)










