» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் : ஆட்சியர் அழகுமீனா தொடங்கி வைத்தார்

திங்கள் 10, பிப்ரவரி 2025 3:11:07 PM (IST)



தேசிய குடற்புழு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.எல்.பி. அரசு தொடக்கபள்ளியில் இன்று (10.02.2025) தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கி பேசுகையில்- தேசிய குடற்புழு நீக்க நாள் திட்டமானது ஆகஸ்ட் 2015 முதல் தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருடத்திற்கு இரு முறை பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குடற்புழு நீக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த 2025 ஆம் வருடத்தின் முதல் சுற்று பிப்ரவரி இன்றும், விடுப்பட்ட குழந்தைகளுக்கு பிப்பரவரி 17 ஆம் நாளன்றும் தமிழ்நாடு முழுவதும் ஓரே நாளில் அனுசரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளிலும் 1-19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், 20-30 வயதுடைய பெண்களுக்கும் (கர்ப்பினி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) வழங்கப்படுகிறது. நமது சுகாதார மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுடைய 558766 குழந்தைகளுக்கும் 20 முதல் 30 வயதுடைய 75043 பெண்களுக்கும் (கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) மொத்தம் 633809 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. 

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாமில் 1161 அங்கன்வாடி பணியாளர்கள் 12251 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி போராசிரியர்கள் 217 சுகாதார பணியாளர்கள் மற்றும் 36 ஆஷா பணியாளர்களும் என மொத்தம் 2639 நபர்கள் ஈடுப்பட்டுள்ளனர். குடற்புழு நீக்க அல்பெண்டசோல் மாத்திரை அனைவருக்கும் பாதுகாப்பானது. இம்மாத்திரை நன்றாக கடித்து மொன்று சுவைத்து சாப்பிட வேண்டும். குடற்புழு நீக்க அல்பெண்டசோல் மாத்திரை உட்கொள்வதினால் குடற்புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்படுகிறது. 

இரத்தசோகை மற்றும் ஊட்டசத்து குறைப்பாட்டை தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகாரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. நினைவாற்றல், கற்றல் திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மாத்திரை உட்கொண்டதனை உறுதிபடுத்தி அவர்களது நல்வாழ்விற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பள்ளி கல்வி) சாரதா, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory