» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டம்: ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்!

சனி 20, ஏப்ரல் 2024 3:19:15 PM (IST)

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கை  இணைய தளத்தில் வருகிற 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். 

இது தொடர்பா குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2024-2025 ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (LKG/ I’Std) குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்குதல் சார்பாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலரால் சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் விதமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் சேர்க்கை நடைமுறை குறித்து ந.க.எண் 1872/சி1/2024, நாள் 01.04.2024-இன்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி தொடக்கநிலை வகுப்பிற்கு (எல்.கே.ஜி. அல்லது முதல் வகுப்பிற்கு) 1 கி.மீ. அருகாமையில் பள்ளி அமைந்திருக்க வேண்டும். சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் 22.04.2024 முதல் 20.05.2024 வரை எங்கிருந்தும் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். 

மேலும் கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம்/ கன்னியாகுமரி மாவட்டக்கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்)/ நாகர்கோவில், மார்த்தாண்டம் மாவட்டக்கல்வி அலுவலகம் (இடைநிலை) / மாவட்டக்கல்வி நாகர்கோவில், அலுவலகம் (தொடக்கக்கல்வி) வட்டாரக்கல்வி அலுவலகம்/ ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டாரவளமையம் ஆகிய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட தனியார் பள்ளிகள் மூலமாகவும் இணைய வழிமூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

MariammalApr 21, 2024 - 06:27:02 AM | Posted IP 162.1*****

LKG serkka age limit entha year la piranthirukanum

EshanthApr 20, 2024 - 09:55:05 PM | Posted IP 172.7*****

Yanmekan

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory