» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசியில் ஜான் பாண்டியனை ஆதரித்து பா.ஜ.க., தேசிய தலைவர் பி.ஜி.நட்டா ரோடுஷோ!

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 5:34:12 PM (IST)



தென்காசியில் ஜான் பாண்டியனை ஆதரித்து அகில இந்திய பா.ஜ.க., தேசிய தலைவர் பி.ஜி.நட்டா ரோடு "ஷோ” நடத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க.,கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு அகில இந்திய பா.ஜ.க.,தலைவர் பி.ஜி.நட்டா தென்காசியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் தென்காசி வாய்க்கால் பாலம் முதல் பேருந்து நிலையம் வரை ரோடு ஷோ நடத்தி பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டார். 

திறந்த வேன் மீது பி.ஜி.நட்டா நின்று ரோடு "ஷோ” நடத்தினார். அவருடன் வேட்பாளர் ஜான் பாண்டியன், பா.ஜ.க.,மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா உடனிருந்தனர்.சாலையின் இருபுறமும் கூடியிருந்த பா.ஜ.க.,கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்களித்து ஜான் பாண்டியனை வெற்றி பெறச் செய்யும்படி பி.ஜி.நட்டா கேட்டுக் கொண்டார். மேலும் அவர் தனது பரப்புரையில், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வாக்கு சேகரித்த வந்துள்ளேன். 

நமது பாரதம் வளர்ச்சியடைந்த பாரதமாக வேண்டும். இதற்காக தென்காசியில் ஜான்பாண்டியனை வெற்றி பெறச் செய்யுங்கள். அவர் பாராளுமன்றம் சென்று தென்காசி தொகுதியின் தேவைகளை நிறைவேற்ற குரல் கொடுப்பார். காசி தமிழ் சங்கத்தை பிரதமர் மோடி அமைத்தார். திருவள்ளுவர் பெயரில் பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டு தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என பி.ஜி. நட்டா பேசினார்.

பிரச்சார நிகழ்ச்சியில் பா.ஜ.க., கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தென்காசி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital






Thoothukudi Business Directory