» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் குரோதி தமிழ் புத்தாண்டு விழா

ஞாயிறு 14, ஏப்ரல் 2024 8:02:47 PM (IST)மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில்  குரோதி தமிழ் புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில்  தமிழ் புத்தாண்டு  விழாஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது. இந்த  விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை கலச, விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. இந்த பூஜையினை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று விடியற்காலை 3 மணி அளவில் சித்தர் பீடத்தில் மங்கள இசை முழங்க குருபீடத்தில் உள்ள ஆன்மிக குரு அடிகளாரின் உறைவிடத்தில் உள்ள திருவுருவ படத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆதிபராசக்தி அம்மனுக்கு மந்திரங்கள் முழங்க அபிஷேக அலங்காரமும் தீபாராதனையும் நடைபெற்றது.

காலை 10 மணி அளவில்  சித்தர் பீடம் வந்திருந்த ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின்  பொறுப்பாளர்கள் சிறப்பான முறையில் வரவேற்பளித்தனர்.இதனை அடுத்து ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாராதனை காட்டி  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து குங்கும பிரசாதம் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து 3 மணி அளவில் பக்தர்கள் நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும் தங்கத் தேர் பவனி சித்தர் பீடத்தில் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார், ஸ்ரீதேவி மற்றும்  வழக்கறிஞர் அகத்தியன், ஸ்ரீலேகா  உள்ளிட்டோரின் வழிகாட்டுதலில் மாவட்டத்  தலைவர் வேலு மேற்பார்வையில் செங்கை மற்றும் காஞ்சி மாவட்ட  ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் மற்றும் சக்தி பீட நிர்வாகிகள் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory