» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப் 4 தோ்வு : விண்ணப்பங்களில் இன்று முதல் திருத்தம் செய்யலாம்

திங்கள் 4, மார்ச் 2024 9:56:41 AM (IST)

குரூப் 4 தோ்வுக்கு சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இன்று (மாா்ச் 4) முதல் மாா்ச் 6-ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தோ்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்தவகையில், கிராம நிா்வாக அலுவலா், வனக் காப்பாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா் உள்ளிட்ட குரூப் 4 பதவிகளில் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜன.30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மாா்ச் 4 முதல் 6-ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை முதல் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளம் வழியே சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்யலாம். அதேசமயம், புதிதாக தோ்வுக்கு யாரும் விண்ணப்பிக்க முடியாது. எழுத்துத் தோ்வு ஜூன் 9-ஆம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.

தமிழ் தகுதித் தாள் 100, பொது அறிவுத் தாள் 100 என மொத்தம் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் தமிழ் தகுதித் தாள் தோ்வில் 40 சதவீத மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பாடம் சாா்ந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory