» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்!

வெள்ளி 1, மார்ச் 2024 11:00:28 AM (IST)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 71- வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர், அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

அதன்பின் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின், தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார். அதைத்தொடர்ந்து, சிஐடி காலனியில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு செல்லும் முதல்வர், அங்கு கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு, ராசாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். 

பின்னர், சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் காலை உணவு முடித்துவிட்டு, அண்ணா அறிவாலயம் செல்கிறார். அங்கு, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களிடம் வாழ்த்து பெறுகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory