» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்கள் அதிகாரமளிக்கும் தமிழக அரசின் திட்டங்கள் கையேடு வெளியீடு!

திங்கள் 11, டிசம்பர் 2023 8:17:21 PM (IST)



பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தமிழக அரசின் முயற்சிகள்” என்ற கையேட்டினை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டார். 

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் சார்பில் "பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளாவிய போக்குகள்” (Global Trends in Crime Against Women) என்ற தலைப்பின் கீழ் சர்வதேச மாநாட்டில் பிரசுரிக்கப்பட்ட "Initiatives of the Tamil Nadu Government towards Women Empowerment” என்ற கையேட்டினை இன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி., பெற்றுக்கொண்டார்.

உடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் அரசு முதன்மைச் செயலாளர் சுன் சோங்கம் ஜடக் சிரு, உள்ளிட்ட துறை சார்ந்த உயரதிகாரிகள், மாநில மகளிர் ஆணையத் தலைவர் எஸ் குமரி, சமூக நல ஆணையர் அமுதவல்லி, மற்றும் உலக அளவில் 20 நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் உள்ளிட்டோர்.!


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory