» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தடம்புரண்ட சரக்கு ரயில் மீட்பு பணிகள் நிறைவு : ரயில் சேவை மீண்டும் தொடங்கியது!

திங்கள் 11, டிசம்பர் 2023 5:24:19 PM (IST)

தடம்புரண்ட சரக்கு ரயில் மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

தூத்துக்குடியில் இருந்து சென்னை துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில், நேற்று இரவு 10.30 மணியளவில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.  ரயிலின் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியதால் தண்டவாளத்தை சீரமைத்து ரயில் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டனர். 

இதனால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களும் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. தற்போது மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் ரயில் சேவை சீராகியுள்ளது. செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவை இன்று(திங்கள்கிழமை) மாலை மீண்டும் தொடங்கியுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory