» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிசுவின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய பிணவறை ஊழியர் சஸ்பெண்ட்!

திங்கள் 11, டிசம்பர் 2023 3:38:08 PM (IST)அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய  பிணவறை ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கூலித்தொழில் மசூத் என்பவரின் மனைவி சோனியா என்பவருக்கு கடந்த 5-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மிச்சாங் புயலால் தேங்கிய மழைநீரில் ஆம்புலன்ஸ் வராததாலும், உரிய மருத்துவ உதவி கிடைக்காததாலும் சௌமியாவுக்கு பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது.

இதையடுத்து சோனியாவுக்கு சிகிச்சை அளிக்க அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அங்கு கருவிகளும், மருத்துவர்களும் இருந்தும் மின்சாரம் இல்லாததால் சோனியாவுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதையடுத்து ஆம்புலன்ஸ் கிடைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டார். 

தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து இறந்து பிறந்த குழந்தையின் உடல் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், திரும்ப பெற முயன்ற மசூத்திடம் ஊழியர்கள் குழந்தையின் உடலில் உரிய முறையில் துணி சுற்றாமல் அட்டை பெட்டியில் வைத்து வழங்கியதாகவும், ரூ.2,500 லஞ்சம் கேட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், உயிரிழந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரம் தொடர்பாக பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு 3பேராசிரியர்கள் கொண்ட விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory