» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயில்வே இரட்டை பாதையில் வடிகாலை மண்போட்டு மூடுவதை தடை செய்ய கோரிக்கை!

திங்கள் 11, டிசம்பர் 2023 11:24:19 AM (IST)

பார்வதிபுரம் ரயில்வே இரட்டை பாதையில் வடிகாலை மண்போட்டு மூடுவதை தடை செய்யக் கோரி ரயில்வேக்கு குமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்ட ரயில் பணிகள் சங்கத் தலைவரும், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினருமான எஸ்.ஆர். ஸ்ரீராம் ரயில்வே அதிகாரிகளுக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது "நாகர்கோவில் பார்வதிபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க சமஞ்ச குளத்தில் மண்போட்டு நிரப்பி பாலம் இருவழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தற்பொழுது இரட்டை பாதை அமைக்க மண்போட்டு நிரப்பப்படுகிறது. அதில் இரட்டை பாதை அமைக்கும் தண்டவாளத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் செல்லும் வடிகால் இருந்து வந்தது. அதனை தற்பொழுது வடிகால் தொடர்ந்து அமைக்காத காரணத்தினால் மழைக்காலங்களில் குளம் தண்ணீர் அடுத்த குளத்திற்கு செல்ல முடியாமல் வீடுகளுக்கு தண்ணீர் 5 அடி உயரத்திற்கு நிரம்புகின்றது.

ஆதலால் மேம்பாலத்தின் அடியே ஏற்கெனவே இருந்த வடிகாலை மீண்டும் தொடர்ந்து அமைக்கவும், தண்ணீர் ஒரு குளத்திலிருந்து மறு குளத்திற்கு எளிதில் செல்லவும் வடிகாலை உடன் அமைக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்

இது சம்பந்தமாக உதவி செயற் பொறியாளர் பழையாறு வடிநில உபகோட்டம் எழுதியுள்ள கடிதத்தில் இரயில்வே துறை மூலம் தண்ணீர் போக்கிற்கு இடையூறாக மண் போட்டு நிரப்பப்படுகிறது. இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் வழிந்தோட வாய்ப்பு இல்லை, ஆதலால் மண்ணை அகற்றி பழைய நிலைக்கு கொண்டு வருமாறு ரயில்வேக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory