» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்!

வியாழன் 30, நவம்பர் 2023 4:40:28 PM (IST)

அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மத்திய அரசு அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய www.eshram.gov.in என்ற தேசிய இணையதளத்தை உருவாக்கி உள்ளது. 

இந்த இணையதளத்தில் கட்டுமான தொழிலாளர்கள், ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், உப்பள தொழிலாளர்கள், சிறு, குறு விவசாய தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், ரிக்சா தொழிலாளர்கள், காய்கறி பழ தெரு வியாபாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், தச்சு வேலை செய்வோர், கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள், டீக்கடை தொழிலாளர்கள், கல்குவாரி தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மற்றும் விபத்தினால் மாற்றுத்திறனாளியானதற்கான காப்பீடு பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் மூலம் பெறலாம். பதிவு பெற்ற தொழிலாளர்களில் 31.03.2022-க்குள் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்படுகிறது.

எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் இணையதளத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் யாரேனும் 31.03.2022-க்குள் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருந்தாலோ அல்லது மாற்றுத்திறனாளி ஆகி இருந்தாலோ, அந்த தொழிலாளர்கள் அல்லது அவர்களின் வாரிசுதாரர்கள் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம். 31.03.2022-க்கு பிறகு யாரேனும் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருந்தாலோ, மாற்றுத்திறனாளி ஆகி இருந்தாலோ, அந்த தொழிலாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள், தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்து காப்பீட்டு தொகையை பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளர்கள் துறை அலுவலக கட்டிட வளாகம், 2ம் தளம், பெருமாள் புரம், திருமால் நகர், திருநெல்வேலி-627007, தொலைபேசி எண்: 0462-2555014 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று திருநெல்வேலி, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory