» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

வியாழன் 30, நவம்பர் 2023 3:57:14 PM (IST)

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்களுக்கு  இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கும், சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு, தமிழ்கம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருகின்றனர். 

இந்த நிலையில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அணியும் ஆடை ஒரு சிலருக்கு முகம் சுழிக்க வைக்கிறது. இதைத் தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோயில் நுழைவு வாயில் மற்றும் காலணி பாதுகாக்கும் இடம் என இரண்டு இடங்களில் நேற்று முதல் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors





Thoothukudi Business Directory