» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த 15 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!
வியாழன் 30, நவம்பர் 2023 11:16:44 AM (IST)
தமிழகத்தில் கனமழையையடுத்து 15 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று டிசம்பர் 2ம் தேதி புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வட இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், டிசம்பர் 5ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 15 மாவட்டங்களில் மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 14 கடலோர மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாவதால் கடலோர மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடலுக்குள் சென்ற மீனவர்கள் கரை திரும்புவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் குறித்தும், மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழைய கட்டடங்களை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் படிவங்களைப் பெறும் பணி நிறைவு: டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:47:13 AM (IST)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)










