» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை; பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!
வியாழன் 30, நவம்பர் 2023 11:11:25 AM (IST)
சென்னையில் கனமழை காரணமாக இன்று நடைபெறுவதாக இருந்த சென்னை பல்கலைக்கழகத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளிலும், நகரின் முக்கிய சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்தது.
இரவு தாண்டியும் மழை நீடித்த நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் மழை எதிரொலியாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் வேறொரு தேதியில் நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)










