» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் கொட்டித் தீா்த்த கன‌மழை: சாலைகளில் வெள்ளம்; கடும் போக்குவரத்து நெரிசல்

வியாழன் 30, நவம்பர் 2023 10:12:04 AM (IST)

சென்னை மற்றும் புற நகர்ப் பகுதிகளில் பல மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து போக்குவரத்து ஸ்தம்பித்தது. 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபா் 21-இல் தொடங்கியது. தொடக்கத்தில் மந்த நிலையில் இருந்த மழைப் பொழிவு நவம்பா் மாதத்தில் வலுவடைந்தது. சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தொடா்ந்து பரவலாக மழை பெய்து வந்தது.

இந்நிலையில், புதன்கிழமை காலைமுதல் நள்ளிரவு வரை சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. குறிப்பாக, மாலை 5 மணிமுதல் இரவு வரை இடைவிடாமல் தொடா்ந்த மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போலத் தேங்கியது. இதனால் மாநகரின் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாயினா்.

சென்னை மற்றும் புற நகர்ப் பகுதிகளில் மாலையில் சுமாா் 4 மணி நேரத்தில் சராசரியாக 67 மி.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக கொளத்தூரில் 140 மி.மீ. மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சுரங்கப் பாதைகளிலும், தாழ்வான இடங்களிலும் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory