» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மின்னல் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4லட்சம் நிவாரண நிதி வழங்கல்!

புதன் 29, நவம்பர் 2023 4:40:32 PM (IST)மின்னல் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் ரூ.4 இலட்சத்திற்கான  நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்  வழங்கினார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், வளையமாதேவி பள்ளிக்கூடத் தெருவைச் சார்ந்த சபரிராஜா (23) என்பவர் கடந்த 6.11.2023 அன்று கல்குளம் வட்டம் மணவாளக்குறிச்சி கிராமம் பெரியகுளம் ஏலா பகுதியில் நெல் அறுவடை இயந்திரம் வாயிலாக நெல்  அறுவடை மேற்கொண்ட நிலையில் திடீரென பெய்த மழையின் காரணமாக அருகாமையில் உள்ள  விவசாய சங்ககட்டிடத்தில் மழைக்காக ஒதுங்கி நின்ற  சபரிராஜா மீது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி காலமானார். 

அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இறந்தவரின் வாரிசுதாரரான அவரது மனைவிக்கு முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து  ரூ.4 இலட்சத்திற்கான காசோலையினை  மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்,   வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)                            சங்கரநாரணயன் உடன் இருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory