» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குழித்துறை நகராட்சியில் ரூ.5.65 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள் : ஆட்சியர் ஆய்வு!

புதன் 29, நவம்பர் 2023 4:34:39 PM (IST)



குழித்துறை நகராட்சி சார்பில் ரூ.5.65 கோடி  மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை குமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்ம் களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக மேற்கொள்ள உள்ள பணிகள் மற்றும் குழித்துறை நகராட்சி சார்பில் புதிய அலுவலக கட்டிட பணிகள் மேற்கொள்ளவது மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்,   நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட ஒற்றாமரம் பகுதியில் கடந்த 1960ம் ஆண்டு கட்டப்பட்டு இயங்கி வந்த நகர்புற சுகாதாரமையம் இயங்கி வந்த சூழலில் இரண்டு முறை அக்கட்டிடம் பழுது பார்க்கப்பட்டது. 

தற்போது அக்கட்டிடமானது மிகவும் பழுது அடைந்துள்ளதால் அக்கட்டிடத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் சுமார் 12 சென்ட் நிலப்பரப்பில்  ரூ.1.10 கோடி மதிப்பில் புதிய நகர்புற சுகாதார கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு தமிழ்நாடு அரசின்  ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன் புதிய கட்டிட பணிகள் விரைவில் துவக்கப்படும்.

அதனைத்தொடர்ந்து, களியக்காவிளை அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம் மற்றம் குழித்துறை இடைவிளாகம் பகுதியில் அமைந்துள்ள குழந்தைகள் மையத்தினை ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளின் வயதுக்குகேற்ப உயரம் மற்றும் எடை உள்ளதா என  பார்வையிட்டதோடு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு குறித்தும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் குழித்துறை நகராட்சியின் சார்பில் விளவங்கோடு வட்டாசியர் அலுவலக வளாகத்தில் உள்ள 15வது நிதிக்குழு மானியத்தின் சார்பில் ரூ.75 இலட்சம் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் அமைக்கும் பணியினையும், பாகோடு பெருந்தெரு பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு நவீன எரிவாயு தகன மேடையினையும், மார்த்தாண்டம் கீழ்பம்மம் பகுதியில் ரூ.3.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும் என ரூ.5.65 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிதிட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர பொது சுகாதார துறை, நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்..

ஆய்வின் போது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்ட அலுவலர் ஜெயந்தி, குழித்துறை நகர்மன்ற தலைவர் ஆசைத்தம்பி, களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், குழித்துறை நகராட்சி ஆணையர் ராமதிலகம், களியாக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் ராமதேவி, தனித்துணை வட்டாசியர் (சமூக பாதுகாப்பு) தினேஷ்,  வருவாய் அலுவலர்கள், பொதுபணித் துறை அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory