» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சுரங்க பணியாளர்கள் மீட்பு தேசத்தின் வெற்றி: எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி
புதன் 29, நவம்பர் 2023 11:24:03 AM (IST)
உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள 41பணியாளர்களும் விரைவில் பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப்பாதை சரிவில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து, மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், அவர்களை மீட்ட மீட்புக்குழுவினருக்கும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், இது தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாவது; "கடந்த நவம்பர் 12ம் தேதி உத்தரகாண்ட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து அதில் சிக்கிய 41 பணியாளர்களையும் சுமார் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டுள்ள தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது நம் தேசத்தின் நம்பிக்கைக்கும் உழைப்பிற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், மீட்கப்பட்டுள்ள 41பணியாளர்களும் விரைவில் பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)










