» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி, நெல்லை உட்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
செவ்வாய் 28, நவம்பர் 2023 5:50:08 PM (IST)
தூத்துக்குடி, நெல்லை உட்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுமேலும் வரும் 30-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பின் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்? - தமிழக வெற்றிக்கழகம் விளக்கம்
புதன் 19, மார்ச் 2025 10:29:04 AM (IST)

கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி ஆக்கி வீரர் உள்பட 2 பேர் பலி: நெல்லையில் பரிதாபம்
புதன் 19, மார்ச் 2025 8:35:58 AM (IST)

நெல்லை மாவட்ட முதல் பெண் தீயணைப்பு அதிகாரி பதவி ஏற்பு: அலுவலர்கள், வீரர்கள் வாழ்த்து
புதன் 19, மார்ச் 2025 8:33:23 AM (IST)

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு: அரசு டாக்டர் சிறையில் அடைப்பு
புதன் 19, மார்ச் 2025 8:05:32 AM (IST)

காவல் அதிகாரி ஜாகிர் உசேன் படுகொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி
செவ்வாய் 18, மார்ச் 2025 5:21:35 PM (IST)

முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை : தினகரன் குற்றச்சாட்டு
செவ்வாய் 18, மார்ச் 2025 4:37:47 PM (IST)
