» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்!

செவ்வாய் 28, நவம்பர் 2023 4:42:33 PM (IST)

ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்டப்டுள்ளது. 

இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் தனியார் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் சகி என்ற சிறப்பு திட்டமான ஒருங்கிணைந்த சேவை மையமானது கன்னியாகுமரி அரசு மருத்துவமனை வளாகத்தில் 10.11.2020 முதல் தலைமை அலுவலகமானது 24 மணி நேரமும் இயங்கி வருகின்றது. 

ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு வழக்கு பணியாளர் இரண்டு பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளது.  இதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிக்கும் கீழ்கண்ட தகுதி வாய்ந்த பெண்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் Case Worker பணியிடங்களின் எண்ணிக்கை - 2. கல்வித் தகுதி BA/MA Sociology, BSW / MSW (Female). பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம், தரைதளம், கன்னியாகுமரி மாவட்டம்-629001 என்ற முகவரிக்கு பதிவு தபாலில் 05.12.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory