» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாங்குநேரி வட்டார பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

செவ்வாய் 28, நவம்பர் 2023 4:23:22 PM (IST)



நாங்குநேரி வட்டார பகுதிகளில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நேரில் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முனைஞ்சிப்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மூலைக்கரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இன்று (28.11.2023) மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

நாங்குநேரி வட்டம், மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் உள்ளனவா எனவும், பாம்புகடி, நாய்கடி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகள் உள்ளனவா எனவும், நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதா எனவும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மூலைக்கரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கல்வித்தரம் குறித்தும், பள்ளியின் அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உகந்த சூழல் உள்ளதா எனவும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து, முனைஞ்சிப்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் இன்று பார்வையிட்டு, மேலும், பணியாளர்களின் வருகைப்பதிவேடு, மருத்துவ வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின்போது, மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory