» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாலையோரம் நிர்வாண நிலையில் கிடந்த இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு!

செவ்வாய் 28, நவம்பர் 2023 3:31:47 PM (IST)



நாகர்கோவிலில் சாலை ஓரம் நிர்வாண நிலையில் கிடந்த பெண் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

குமரி மாவட்டம் நாகர்கோவிலில்  27/11/2023 திங்கள் கிழமை காலை 11 மணி அளவில் வெட்டுர்ணி மடத்திலிருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி செல்லும் சாலையில் தனியார் மருத்துவமனை முன்பு சாலையோரம் 35 வயதுக்கு மேல்  மதிக்கத்தக்க சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் தன்னுடைய உடம்பில் எந்த ஒரு ஆடையும் இன்றி  நிர்வாண நிலையில் படுத்திருந்தார். 

இதனைப் பார்த்த  அப்பகுதியில் வாடகை ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் சுரேஷ் சினேகம் பெற்றோர் இல்லம் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் லதா கலைவாணனுக்கு தகவல் கொடுத்து அப் பெண்மணியை உடனடியாக மீட்குமாறு தகவல் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக செயலில் இறங்கிய சினேகம் தொண்டு நிறுவனத்தினர் அங்கு சென்று முழு நிர்வாணமாக கிடந்த  அந்தப் பெண்ணுக்கு தாங்கள் கொண்டு வந்த  புதிய ஆடையை நிறுவன ஊழியர்கள் அணிவித்தனர்.

மேலும் லதா கலைவாணன் அப்  பெண்ணிடம் விசாரித்ததில் அவர் செபஸ்தியாள் (39) D/O தங்கப்பழம் என்பது தெரிய வந்தது. இதைத் தவிர மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வேறு எந்த தகவலும் தனக்குத் தெரியாது என்று கூறியதால் மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினியை தொடர்பு கொண்டு அங்கு நடந்த எல்லா விஷயங்களையும் லதா கலைவாணன் எடுத்துக் கூறினார். 

உடனே சமூக நல அலுவலர் சரோஜினி அப்பெண்ணுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க முன்வந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு குமரி மாவட்டம் தடிக்காரன் கோணத்தில் இயங்கி வரும் அசிசி மனநல பெண்கள் காப்பகத்தில் அப்பெண்னை ஒப்படைக்கும் படி அறிவுறுத்தியதின் அடிப்படையில் மீட்கப்பட்ட அப்பெண்  பத்திரமாக  தடிக்காரன்கோணம் அசிசி மனநல (பெண்கள்) காப்பகத்தில் கொண்டு சேர்க்கப்பட்டார்.

சாலையோரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் முற்றிலும் ஆடைகள் இன்றி நிர்வாணமாக கிடந்த செய்தி கேட்டு துரித நடவடிக்கையில் தன் பணியாளர்களுடன் இறங்கி அந்தப் பெண்ணை  மீட்டு அவருக்கு ஆடை அணிவித்து காப்பகத்தில் ஒப்படைத்த சினேகம் பெற்றோர் இல்ல நிறுவன தலைவர் லதா கலைவாணனின் மனிதநேயமிக்க செயலை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory