» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் மாநகராட்சியில் ₹58.50 இலட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள் துவக்கம்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 3:26:13 PM (IST)
நாகர்கோவில் மாநகராட்சியில் ₹58.50 இலட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகளை மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்.
நாகர்கோவில் மாநகராட்சியில் 49-வது வார்டுக்குட்பட்ட மெகராஜ் கார்டன் பகுதியில் ₹20 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, 48-வது வார்டுக்குட்பட்ட ஆசாத் கார்டன்-2 பகுதியில் ₹25 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, 34-வது வார்டுக்குட்பட்ட அம்மன் கோவில் தெருவில் ₹5 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி,
17-வது வார்டுக்குட்பட்ட பெருமாள் நகரில் ₹3.50 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 22-வது வார்டுக்குட்பட்ட பேரின்ப தெருவில் ₹5 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகிய பணியினை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.