» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆபத்தான முறையில் பைக் ஓட்டி ரீல்ஸ் வெளியிட்ட வாலிபரின் பைக் பறிமுதல்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 12:49:36 PM (IST)
நாகர்கோவில் வேப்பமூடூ பகுதியில் ஆபத்தான முறையில் பைக் ஓட்டி இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட வாலிபரின் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடூ பகுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்லசாமி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இளைஞர் ஒருவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அந்த இளைஞர் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவு செய்தது தெரியவந்தது. ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கிய அந்த நபருக்கு நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறை 11500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.