» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவை - சென்னை இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்

செவ்வாய் 28, நவம்பர் 2023 9:53:31 AM (IST)

கோவை-சென்னை இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இன்று(நவ.28) முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல்- கோவை மற்றும் கோவை - சென்னை இடையே செவ்வாய்க்கிழமைகளில் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் நவ. 28 முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு காட்பாடிக்கு 8.43 மணிக்கு வந்தடையும். அங்கிருந்து 8.45 மணிக்கு புறப்பட்டு ஜோலாா்பேட்டைக்கு 9.53க்கு வந்தடையும். அங்கிருந்து 9.55 மணிக்கு புறப்பட்டு காலை 11.23 மணிக்கு சேலம் வந்தடையும்.

சேலத்திலிருந்து 11.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு ஈரோடு சென்றடையும், அங்கிருந்து 12.20 மணிக்கு புறப்பட்டு 1.03 மணிக்கு திருப்பூா் சென்றடையும். பின்னா் அங்கிருந்து 1.05 மணிக்கு புறப்பட்டு 2.15 மணிக்கு கோவை சென்றடையும்.

அதுபோல மறுமாா்க்கத்தில் கோவை - சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை (நவ.28) முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு 3.43 மணிக்கு திருப்பூா் வந்தடையும், அங்கிருந்து 3.45 மணிக்கு புறப்பட்டு 4.25 மணிக்கு ஈரோடு வந்தடையும். அங்கிருந்து 4.30 மணிக்கு புறப்பட்டு 5.18 மணிக்கு சேலம் வந்தடையும். 

பின்னா் சேலத்திலிருந்து 5.20 மணிக்கு புறப்பட்டு 6.48 மணிக்கு ஜோலாா்பேட்டை சென்றடையும், அங்கிருந்து 6.50 மணிக்கு புறப்பட்டு 7.48 மணிக்கு காட்பாடி சென்றடையும். பின்னா் அங்கிருந்து 7.50 மணிக்கு புறப்பட்டு 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும். இந்த வாராந்திர சிறப்பு ரயில் 8 பெட்டிகளுடன் 2024 ஜனவரி 30-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory