» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் : தமிழக அணி தேர்வு நவ.30ல் துவக்கம்

திங்கள் 27, நவம்பர் 2023 4:50:40 PM (IST)

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான தமிழக அணியில் இடம் பெறுவதற்கான தேர்வு வரும் நவ.30-ம் தேதி முதல் டிச.2வரை  சென்னையில் நடைபெறவுள்ளது.

2023 கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள்  19.01.2024 முதல் 31.01.2024 வரை 26 விளையாட்டுகளுக்கு தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் நடைபெறவிருப்பதை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் பொருட்டு அதற்கான தமிழ்நாடு தேர்வு போட்டிகள் கூடைப்பந்து, கால்பந்து, கபடி, கோகோ, வாலிபால் மற்றும் ஹாக்கி ஆகிய விளையாட்டுகளுக்கு சென்னையில் 30.11.2023 முதல் 02.12.2023 வரை நடைபெற உள்ளது.

அதன்படி, கூடைப்பந்து தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜவர்ஹலால் நேரு உள்விளையாட்டரங்கில் மாணவிகளுக்கு 01.12.2023 அன்றும் (ம) மாணவர்களுக்கு 02.12.2023 அன்றும் கலந்து கொள்ளலாம். கால்பந்து தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் மாணவிகளுக்கு30.11.2023 அன்றும் (ம) மாணவர்களுக்கு 30.11.2023 (ம) 01.12.2023 ஆகிய இருதினங்களிலும் கலந்து கொள்ளலாம். 

கபடி தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட விளையாட்டரங்கம் நேருபார்க் சென்னையில் மாணவிகளுக்கு 30.11.2023 (ம) மாணவர்களுக்கு 01.12.2023 அன்றும் கலந்து கொள்ளலாம். 

கோ-கோ தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட விளையாட்டரங்கம் நேருபார்க் சென்னையில் மாணவிகளுக்கு 30.11.2023 அன்றும் (ம) மாணவர்களுக்கு 01.12.2023 அன்றும் கலந்து கொள்ளலாம். வாலிபால் தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் எம்.ஆர்.கே. ஹாக்கி விளையாட்டரங்கம் சென்னையில் மாணவிகளுக்கு 30.11.2023 அன்றும் மாணவர்களுக்கு 01.12.2023 அன்றும் கலந்து கொள்ளலாம். 

ஹாக்கி தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாணவிகளுக்கு 30.11.2023 அன்றும் மாணவர்களுக்கு 01.12.2023 அன்றும் கலந்து கொள்ளலாம். மேற்கண்ட அனைத்து தேர்வு போட்டிகளிலும் கலந்து கொள்ள சம்பந்தப்பட்ட இடங்களில் காலை 7 மணிக்கு ஆஜராக வேண்டும். மாநில அளவிலான தேர்வு போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் 01.01.2005 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். 

கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தங்களுடன் ஆதார் அட்டை (அ) பாஸ்போட், பத்தாம் வகுப்புசான்றிதழ், பிறப்புசான்றிதழ் (குறைந்தது 5 வருடங்களுக்கு முன்னதாக பெற்றிருக்கவேண்டும்) அதாவது 01.01.2013  அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சம்பந்தப்பட்ட மாநகராட்சி மூலமாகவோ அல்லது கிராம பஞ்சாயத்து மூலமாகவோ பெற்றிருக்கவேண்டும். 

தேர்வுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு பயணப்படியோ, உணவுப்படியோ வழங்கப்படமாட்டாது. மேலும் விபரங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண்-04652 262060 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளவும்.என குமரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory