» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாடு மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்து: வாலிபர் சாவு - நெல்லையில் பரிதாபம்!

திங்கள் 27, நவம்பர் 2023 3:37:31 PM (IST)

நெல்லையில் மாடு மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்தில் வாலிபர் பரிதாப‌மாக உயிரிழந்தார்.

நெல்லையை அடுத்த மேலப்பாளையம் குறிச்சி வீரமாணிக்கபுரம் பகுதியை சேர்ந்தவர் லாசர். இவரது மகன் டேனியல் (28), மகள் ஜெயா (19). அதே பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் முனியசாமி (22). இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ஆகும். டேனியல், முனியசாமி உள்ளிட்டோர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி ஆக்ரா பகுதியை சேர்ந்த மேகா (27) என்பவருடன் டேனியலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் வைத்து திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து டெல்லியில் இருந்து அவர்கள் சென்னைக்கு ரயிலில் வந்துள்ளனர். பின்னர் நேற்று சென்னையில் இருந்து ரெயிலில் புறப்பட்டு இன்று அதிகாலை நெல்லைக்கு வந்தனர். அதன் பின்னர் தச்சநல்லூரை அடுத்த சேந்திமங்கலம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் மணி (28) என்பவர் ஆட்டோவில் டேனியல், அவரது மனைவி மேகா, தங்கை ஜெயா, முனியசாமி உள்பட 7 பேர் வீரமாணிக்கபுரத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது பாளையங் கால்வாயை அடுத்த தனியார் விடுதி அருகே சாலையில் நடுவில் படுத்திருந்த மாடு மீது ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முனியசாமி, டேனியல், ஜெயா, மேகா, மணிஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முனியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory