» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகை குஷ்புவை கைது செய்ய வேண்டும்: குமரி மாவட்ட எஸ்.பி.,யிடம் மனு!

திங்கள் 27, நவம்பர் 2023 3:33:13 PM (IST)

சேரி என்ற வார்த்தையை இழிவு படுத்தி பேசியை நடிகை குஷ்புவை கைது செய்ய வேண்டும் என குமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆதித்தமிழர் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் குமரேசன் தலைமையிலான நிர்வாகிகள், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி சுந்தரவதனத்திடம் அளித்துள்ள மனுவில், கூறியிருப்பதாவது: நடிகை திரிஷா குறித்து அநாகரிகமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகையும் மகளிர் ஆணைய உறுப்பினருமான பா.ஜனதாவை சேர்ந்த குஷ்பு தனது இணையதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவு வெளியிட்டிருந்தார். 

இதற்கு தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து கேள்வி எழுப்பி பதிவிட்டு இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை குஷ்பு அவரது இணையதள பதிவில் "சேரி மொழியில் பேச முடியாது" என பதிவிட்டிருந்தார். சேரி என்ற வார்த்தையை இழிவு படுத்தி ஒட்டுமொத்த பட்டியலின மக்களை இழிவு படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டுள்ள நடிகை குஷ்பு மீது வன்கொடுமை சட்டம் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory