» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலை பிரச்சாரம் : ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வத்தார்!

திங்கள் 27, நவம்பர் 2023 3:00:29 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுவின் தீமைகள் குறித்து விழிப்பணர்வு கலைப்பிரசாரத்தினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி மாவட்ட மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (27.11.2023) நடைபெற்ற மது மற்றம் போதையினால் ஏற்படும் தீமைகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலைப் பிராச்சாரத்தினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்  கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (ஆயம்) ஜெ. லொரைட்டா, அலுவலர்கள், பணியாளர்கள், கலைப்பிராச்சார குழுவினர் கலந்து கொண்டார்கள்.

இந்த விழிப்புணர்வு கலைப்பிரச்சாரமானது இன்று முதல் 10 நாட்களுக்கு மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கல்லூரி மாணவ மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் மற்றம் பொதுமக்களுக்க மது மற்றும் போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தல், விழிப்புணர்வு கலைப்பிரச்சாரம் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் தொடர்ந்து நடைபெறும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory