» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் வி.பி.சிங் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

திங்கள் 27, நவம்பர் 2023 11:36:36 AM (IST)



சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமா் வி.பி.சிங் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

விழாவில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் குடும்பத்தினா் மற்றும் தமிழக அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்றனர். சிலையை திறந்து வைத்த பிறகு, அமைச்சர் உள்ளிட்ட அனைவருடனும் வி.பி. சிங் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து வி.பி. சிங் குடும்பத்தினர் சார்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.  

சமூகநீதிக்காக வி.பி. சிங் செய்த பணிகளைப் போற்றும் வகையில், சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 52 லட்சத்தில் வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது.  பிரதமராக இருந்தபோது தமிழக மக்களின் வாழ்வதாரப் பிரச்னையான காவிரி நதிநீா் பிரச்னைக்கு தீா்ப்பாயத்தை அமைத்து தந்தாா் வி.பி. சிங்.

சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜா் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணா பெயரையும் சூட்டினாா். சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசுப் பணியிடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பி.பி.மண்டல் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையை வி.பி.சிங் செயல்படுத்தினாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory