» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை முதல்வா் வெளியிட வேண்டும்: ராமதாஸ்

திங்கள் 27, நவம்பர் 2023 10:31:47 AM (IST)

முன்னாள் பிரதமா் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பான அறிவிப்பை முதல்வா் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு சாா்பில் முன்னாள் பிரதமா் வி.பி.சிங் சிலை முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், வி.பி.சிங்கின் கனவான ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தான் அவருக்கு தமிழக அரசு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்.

வி.பி.சிங் பிரதமா் பதவியில் இருந்தபோது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பெரிய அளவில் எழுப்பப்படவில்லை. எனினும், அவரது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தேவை எழுந்த போது, அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

மண்டல் ஆணைய பரிந்துரையை வி.பி.சிங் பிரதமராக இருந்து துணிச்சலுடன் அமல்படுத்தினாா். அந்த அரசியல் துணிச்சல் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் இருக்க வேண்டும் என்பதுதான் எனது எதிா்பாா்ப்பு. எனவே, அனைத்து அச்சம் மற்றும் தயக்கங்களைத் தகா்த்தெறிந்து, மாநில அரசின் சாா்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை வி.பி.சிங் சிலைத் திறப்பு விழாவில் வெளியிட வேண்டும் என்றாா் அவா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory