» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை தீபத் திருநாள் விழா
திங்கள் 27, நவம்பர் 2023 9:53:01 AM (IST)

தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு சுவாமி அம்பாள் சிறப்பு அலங்கார சப்பரத்தில் மேள தாளம் முழங்க எழுந்திருளினர்.
சொக்கப்பனை அமைக்கப்பட்டு இருந்த சுவாமி சன்னதிக்கு சப்பரம் சென்றது. அங்கு சொக்கப்பனைக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு கொளுத்தப்பட்டது. பின்னர் அம்மன் சன்னதியில் அமைக்கப்பட்டு இருந்த சொக்கப்பனையும் கொளுத்தப்பட்டது . சிறப்பு அலங்கார தீபாராதனைக்கு பின் சுவாமி அம்பாள் சப்பரம் வீதி சென்று கோவிலை சென்றடைந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர். தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில்களில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதனால் கோவில்களில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)










