» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போதைப்பொருள் ஒழிப்பில் மெத்தனம்: 3 உதவி போலீஸ் கமிஷனர்கள் பணியிட மாற்றம்!

ஞாயிறு 26, நவம்பர் 2023 10:29:12 AM (IST)

சென்னையில் போதைப்பொருள் ஒழிப்பில் மெத்தனம் காட்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

அந்த புகாரில் சிக்கிய 9 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் இதர போலீசார் 36 பேர்கள் என மொத்தம் 65 பேர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது. சென்னை கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் காத்திருப்போர் பட்டியலில் அவர்கள் வைக்கப்பட்டனர். அவர்களில் 3 இன்ஸ்பெக்டர்கள் வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்படுவதற்காக டி.ஜி.பி. அலுவலக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

மற்றவர்களில் 7 சப்-இன்ஸ்பெக்டர்களும் 16 போலீசாரும் நேற்று வெளிமாவட்டங்களுக்கு தூக்கி அடிக்கப்பட்டனர். மீதி உள்ளவர்கள் மீதும் அடுத்த கட்ட நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. இதற்கிடையில் புகாரில் சிக்கிய சென்னை உளவுப்பிரிவில் பணியாற்றிய 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 7 போலீசாரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

இதே புகாரில் சிக்கிய 3 உதவி போலீஸ் கமிஷனர்கள் நேற்று சிவகங்கை, ராமநாதபுரம், செங்கல்பட்டு ஆகிய வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் மூவரும் வட சென்னை கூடுதல் கமிஷனர் சரகத்தில் பணியாற்றியவர்கள். டி.ஜி.பி. சங்கர்ஜிவால் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory