» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்தாமரைகுளம்: ரூ.3.10 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி துவக்கம்!
சனி 25, நவம்பர் 2023 10:02:30 AM (IST)

தென்தாமரைகுளம் மற்றும் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.10 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தென்தாமரைக்குளம் முகிலன்குடியிருப்பு மற்றும் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில், துவக்கி வைத்து தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் முதலமைச்சர் கிராம சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.71 கோடி மதிப்பில் அகஸ்தீஸ்வரம் வட்டம் தென்தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட தென்தாமரைகுளம் பால்பண்ணை பதி, புன்னையடி அங்கன்வாடி சானல் சாலை, 11-வது வார்டு சிவன் கோவில் சாலை, பூவியூர் சானல் சாலை, பொன்னார்விளை – தலக்குளம் சாலை, முகிலன்குடியிருப்பு கடற்கரைசாலை, முகிலன்குடியிருப்பு இரண்டாவது நடுத்தெரு சாலை, விஜயநகரி முதல் சடையநேரி சாலை, கோயில்விளை படிப்பகம் முதல் திடக்கழிவு மேலாண்மை திட்ட சாலை ஆகியவற்றில் பேவர் பிளாக் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
மேலும், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் பெரியகோவில் முதல் கல்லூரி சாலை, ரவுண்டானா முதல் பஞ்சலிங்கபுரம் சாலை, வலதுபுரம் அமுதம் நகர் வரை, ரிலையன்ஸ் பல்க் வலது பக்கம் முதல் குறுக்கு தெரு வரை, அகஸ்தீஸ்வரம் பிள்ளையார் கோவில் மேற்கு முதல் கிழக்கு தெரு வரை, அகஸ்தீஸ்வரம் பிள்ளையார் கோவில் தெரு, அகஸ்தீஸ்வரம் கீழச்சாலை சாஸ்தான் குண்டு குளம், அகஸ்தீஸ்வரம் உயிலடி தெரு, இடையன்விளை உச்சிமாகாளியம்மன் கோவில் சாலை, இடையன்விளை ரெயில்வே முதல் வயல் வழி சாலை, சந்தையடி நுழைவுவாயில் முதல் கவற்குளம் மெயின்ரோடு வரை, சந்தையடி டாக்டர் குளம் வழி, சந்தையடி தரைமட்ட தொட்டி முதல் வயல் வழி சாலை, அகஸ்தியர் கோவில் ஆர்ச் முதல் கோவில் வழி சாலை வரை தார் சாலை அமைத்தல் என சுமார் ரூ.3 கோடியே 10 இலட்சம் மதிப்பிலான சாலை பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் அவர்களின் ஆதரவினால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பேரூராட்சிகளில் இது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மழை சவலாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அதிகமான நிதியை பெற்று பல்வேறு விதமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இப்பணிகள் வாயிலாக பேரூராட்சி பகுதி மக்கள் பயனடைவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன். இப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறுஅமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளில் பேரூராட்சி தலைவர்கள் என்.கார்த்திகா பிரதாப் (தென் தாமரைகுளம்), பி.அன்பரசி ராமராஜன் (அகஸ்தீஸ்வரம்) வார்டு உறுப்பினர்கள் அமுதா பிரதாப் (தென் தாமரைகுளம்) , பிரேம் ஆனந்த் (அகஸ்தீஸ்வரம்), ஊராட்சி தலைவர்கள் விமலா (சூருளகோடு) , பிராங்ளின் (தடிக்காரகோணம்) கேட்சன், சுரேஷ், பார்த்தசாரதி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளத்தில் பாஜகவின் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்: நயினார் நாகேந்திரன்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:50:14 PM (IST)

நூறு நாள் வேலை திட்டத்தை சிதைக்க முயற்சி : மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:46:47 PM (IST)

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:14:54 PM (IST)

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்: ஆட்சியர் அறிவிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:52:13 PM (IST)

கேரம் வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி ஊக்கத்தொகை : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
திங்கள் 15, டிசம்பர் 2025 3:12:06 PM (IST)

எஸ்ஐஆர் படிவங்களைப் பெறும் பணி நிறைவு: டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:47:13 AM (IST)










