» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடியரசு தின விழா கலை நிகழ்ச்சிகள் நடத்த பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்!

வெள்ளி 24, நவம்பர் 2023 12:32:17 PM (IST)

குடியரசு தின விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்த விரும்பும் பள்ளி, கல்லூரிகள் டிச.7க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் 26.01.2024 அன்று குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. விழாவின் போது பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகளில் பராம்பரிய கலைகள், கலாச்சரம் மற்றும் பண்பாடு, அறிவியல் வளர்ச்சி, பல்துறை முன்னேற்றம், தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த விரும்பும் பள்ளி கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 100 நபர்கள் ஒரு குழுவில் பங்கேற்க வேண்டும். நிகழ்ச்சி 7 நிமிடங்கள் வரை இருக்கலாம்.

நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் பள்ளி மற்றும் கல்லூரிகள் தேர்வு செய்யப்படும் இசைத்தொகுப்பு/பாடல், கருப்பொருள் Concept உள்ளிட்ட விவரங்களுடன் தங்கள் விண்ணப்பங்களை டிசம்பர் 7, 2023-க்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory