» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜூவல்லரி மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெள்ளி 24, நவம்பர் 2023 11:14:02 AM (IST)

பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை மோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை செயல்பட்டது. இந்த கடையின் கிளைகள் மதுரை, நாகர்கோவில், புதுச்சேரி, சென்னை உள்பட 8 இடங்களில் இருந்தன. இந்த கடை நிர்வாகத்தினர், பல்வேறு புதிய நகை சேமிப்பு திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்தனர்.

கவர்ச்சிகரமான இந்த திட்டங்களை பார்த்த பொதுமக்கள், அந்த நகைக் கடையின் திட்டங்களில் சேர்ந்தனர். ஆனால், பலரது சீட்டுகள் முதிர்வு அடைந்துவிட்ட நிலையில், அதற்குரிய பணத்தையும், நகையையும் வழங்காமல் அந்த கடை நிர்வாகம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. ரூ.100 கோடி அளவில் நடைபெற்ற இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி அந்த கடைக்கு சொந்தமான இடங்களில் தமிழகம் முழுவதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அதோடு பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர்களான மதன் செல்வராஜ், அவரது மனைவி கார்த்திகா ஆகிய 2 பேரையும் தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்ததாக பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்தது.

இந்நிலையில், பிரணவ் ஜூவல்லரி நகைக்கடையினர் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினரும் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் கணக்கில் வராத 11.60 கிலோ எடையுள்ள தங்கநகைகளும், 23.70 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு நபர்களிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.அதில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரகாஷ் ராஜூ ஓரிரு நாட்களில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory