» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜயகாந்த் இன்னும் ஒரு சில நாள்களில் வீடு திரும்புவார் : மருத்துவமனை அறிக்கை
வியாழன் 23, நவம்பர் 2023 5:32:39 PM (IST)
விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும் இன்னும் ஒரு சில நாள்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் வழக்கமான பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சில நாள்களில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக ஏற்கெனவே கடந்தநவ . 20 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தது. தொடர்ந்து அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக பரவும் தகவல் பொய் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் நவ. 18 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் படிவங்களைப் பெறும் பணி நிறைவு: டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:47:13 AM (IST)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)










