» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

வியாழன் 23, நவம்பர் 2023 4:41:37 PM (IST)

தமிழக முன்னாள் ஆளுநரும், உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதியுமான எம். பாத்திமா பீவி உடல்நலக் குறைவால் இன்று (நவ.23) காலமானார். அவருக்கு வயது 96.

தமிழக முன்னாள் ஆளுநரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான எம். பாத்திமா பீவி இன்று உடல்நலக் குறைவால் காலமானார். கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது அவரது உயிர் பிரிந்துள்ளது. மறைந்த பாத்திமா பீவி, உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி ஆவார். தமிழக ஆளுநராகவும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

1927-ம் ஆண்டு கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிறந்த பாத்திமா பீவி, திருவனந்தபுரத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் வேதியியலில் பட்டப்படிப்பை முடித்தார், பின்னர் அரசு சட்டக் கல்லூரியில் எல்எல்பி படித்தார். தங்கப் பதக்கம் வென்ற அவர், மாவட்ட நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீதித்துறை சேவையில் மாஜிஸ்திரேட்டாக சேர்ந்தார்.

1974-ல் மாவட்ட அமர்வு நீதிபதியாக பதவியேற்ற அவர், 1983ல் கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1989 இல், அவர் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். கடந்த 1997-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை, தமிழக ஆளுநராக இருந்தார். மறைந்த பாத்திமா பீவிக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நீதித்துறையைச் சேர்ந்தவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் 

தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், உச்சநீதிமன்ற நீதிபதியான முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவருமான பாத்திமா பீவி அவர்கள் மறைந்தார் என்றறிந்து வருந்துகிறேன்.

உச்சநீதிமன்ற நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், கேரள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு ஆளுநர் எனப் பல உயர்பொறுப்புகளில் பணியாற்றியுள்ள பாத்திமா பீவி அவர்களது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory