» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கலைஞர் 100 வினாடி-வினா 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுவினர் பதிவு

வியாழன் 5, அக்டோபர் 2023 12:29:20 PM (IST)



கனிமொழி கருணாநிதி எம்.பியின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட கலைஞர் 100 வினாடி-வினா போட்டியில் 50,000திற்கும் மேற்பட்ட குழுவினர் பதிவுசெய்து ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டை கொண்டாடும் வகையில்‌ திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்களால் அண்ணா பிறந்தநாளில் கலைஞர் 100 வினாடி-வினா போட்டிகள் தொடங்கப்பட்டது. போட்டிகள் இணைய வழியில் தொடங்கப்பட்டு இன்று வரை 50,000 திற்கும் மேற்பட்ட குழுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 1,24,097 மேற்பட்ட முயற்சிகளில் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். 

3,32,365 பேர் www.kalaignar100.co.in இணைய தளத்தை இதுவரை பார்வையிட்டுள்ளனர். திமுக மகளிர் அணி சார்பில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னெடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'கலைஞர் 100 வினாடி வினா' போட்டி, கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் ஒரு பகுதியாக நடைபெறுகிறது. ரூ.35 லட்சத்துக்கு மேல் ரொக்கத் தொகையை பரிசளித்து ''கலைஞர் 100 வினாடி வினா'' எனும் அறிவுத் திருவிழாவை நடத்துகிறார் கனிமொழி கருணாநிதி எம்.பி.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகிய திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரும் வழிநடத்திய அறிவுப் புரட்சியின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு முன்னெடுத்துச் செல்வதே இந்த வினாடி வினாவின் முதன்மை நோக்கமாகும்.

இந்த வினாடி வினா இரண்டு பிரிவுகளில் நடைபெறுகிறது:

●18 வயதுக்குட்பட்ட பிரிவு 

●18 வயதுக்கு மேற்பட்ட பிரிவு (பொதுப் பிரிவு) 

வினாடி வினா சுற்றுகள்: 

1.முதல் சுற்று - இணையவழி வினாடி வினா 
2.இரண்டாவது சுற்று - மண்டல போட்டி 
3.மூன்றாவது சுற்று - அரையிறுதி & இறுதிப் போட்டி 

முதல் சுற்று இணையவழி வினாடி வினா செப்டம்பர் 15, 2023 அன்று தொடங்கி அக்டோபர் 25, 2023 வரை நடைபெறுகிறது. வினாடி வினா இணையதளம் - www.kalaignar100.co.in

இணையவழி சுற்று: இணையவழி வினாடி வினாவின் குறிக்கோள் மாவட்டத்தில் அதிகபட்ச மதிப்பெண்களைப் பெறுவதாகும். மாவட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்கள் மண்டல சுற்றுக்கு முன்னேறுவார்கள். 

பங்கேற்பாளர்கள் தங்கள் தொலைபேசி எண்கள் மற்றும் பிற அடிப்படை விவரங்களுடன் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழுவும் 3 உறுப்பினர்களைக் கொண்டதாகும்.

ஒருவர் 'Take Quiz' என்பதைக் கிளிக் செய்தால், 100 வினாடிகளுக்கு ஒரு காலக்கெடு இயங்கித் தொடங்கும். அந்த குறிப்பிட்ட முயற்சியில், 50 கேள்விகளுக்கு விடையளிக்க 100 வினாடிகள் கிடைக்கும். அனைத்து 50 கேள்விகளும் பலவினை தெரிவு வினாக்கள் (MCQs) ஆகும்.  சுற்றின் காலக்கெடு முடிவதற்குள் தங்கள் சிறந்த மதிப்பெண்ணை பெற ஒவ்வொரு குழுவிற்கும் மொத்தம் 100 முயற்சிகள் வழங்கப்படும்.

மண்டல சுற்று: ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண்கள் பெறும் குழுக்கள் மண்டல சுற்றுக்கு முன்னேறுவார்கள். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வினாடி வினா போட்டி நடத்தப்படும். இது ஒரு குழு வினாடி வினா போட்டியாக இருக்கும். மண்டலத்தின் வெற்றியாளர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். மண்டலத்தின் வெற்றியாளர்கள் சென்னையில் நடைபெறவுள்ள அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.

இறுதிப் போட்டி: அரையிறுதியின் வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். இரு பிரிவுகளிலும் இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரு பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இரு பிரிவுகளிலும் மூன்றாமிடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ. 3 லட்சம். 

வெவ்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் உள்ளன. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்குவார்.


மக்கள் கருத்து

RithikaNov 22, 2023 - 11:09:49 PM | Posted IP 172.7*****

Good

க. ஸ்ரீ பிரசாத்Oct 29, 2023 - 12:04:49 PM | Posted IP 157.4*****

கலைஞர் வாழ்க

VijayaOct 20, 2023 - 07:43:26 PM | Posted IP 172.7*****

Ok ok

KabinOct 20, 2023 - 07:43:01 PM | Posted IP 172.7*****

Ok

KabinOct 20, 2023 - 07:42:47 PM | Posted IP 172.7*****

Ok

DharunikaaOct 10, 2023 - 04:44:09 PM | Posted IP 172.7*****

I want join the dance hip hop song Dharunikaa 9-A

KISHORE .aOct 9, 2023 - 08:13:53 PM | Posted IP 172.7*****

Good

DharunikaaOct 9, 2023 - 07:28:05 AM | Posted IP 172.7*****

I want iphone 14 pro gift

S.praveen kumarOct 9, 2023 - 07:20:50 AM | Posted IP 172.7*****

Nothing

NanthakumarOct 8, 2023 - 10:02:06 PM | Posted IP 172.7*****

For only enjoyed

GangaOct 8, 2023 - 10:53:33 AM | Posted IP 172.7*****

வினாடி வினா

AnanyaaOct 7, 2023 - 07:12:56 PM | Posted IP 172.7*****

💯💯

DharunikaaOct 7, 2023 - 02:34:29 PM | Posted IP 172.7*****

Govt higher secondary school

DharunikaaOct 7, 2023 - 02:33:42 PM | Posted IP 172.7*****

School class9 girl And age 16

KowsiOct 7, 2023 - 01:33:22 PM | Posted IP 172.7*****

👍

S. AbinavOct 7, 2023 - 11:47:04 AM | Posted IP 172.7*****

I want to play this game

S. AbinavOct 7, 2023 - 11:38:46 AM | Posted IP 172.7*****

I want to play this game

P.kowdheepOct 7, 2023 - 10:37:36 AM | Posted IP 172.7*****

I want to play this

S. Afrin NishaOct 7, 2023 - 06:51:51 AM | Posted IP 172.7*****

I want to join this

S.Afrin nishaOct 7, 2023 - 06:51:13 AM | Posted IP 172.7*****

I want to join this

PriyadharshiniOct 6, 2023 - 11:48:16 PM | Posted IP 172.7*****

Very interesting

PriyadharshiniOct 6, 2023 - 11:47:41 PM | Posted IP 172.7*****

Very interesting

A.AjaysaravananOct 6, 2023 - 08:07:21 PM | Posted IP 172.7*****

Good

A.Sukaina FathimaOct 6, 2023 - 07:58:48 PM | Posted IP 172.7*****

For only enjoyment

KaviyarasuOct 6, 2023 - 07:58:41 PM | Posted IP 172.7*****

வணக்கம் ஐயா

A.Sukaina FathimaOct 6, 2023 - 07:57:53 PM | Posted IP 172.7*****

For only enjoyment

பாண்டியராசன்Oct 5, 2023 - 01:22:00 PM | Posted IP 172.7*****

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே நாற்பதும் நமதே நாடும் நமதே என்பது சாத்தியம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory