» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடு கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி: விஜய் வசந்த் எம்.பி இரங்கல்!
திங்கள் 2, அக்டோபர் 2023 8:33:13 PM (IST)

மணப்பாடு பகுதியில் நடு கடலில் படகு கவிழ்ந்து விபத்தில் மீனவர் இறந்த சம்பவத்திற்கு விஜய்வசந்த் எம்.பி இரங்கல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு பகுதியில் தமிழகத்தை சேர்ந்த 16 மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் படகு கடல் சீற்றத்தினால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 13 மீனவர்களை சுற்றுமுள்ள மீன்பிடி படகுகள் காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர். மூன்று பேர் கடலில் காணாமல் போய் விட்டனர். அதில் மீனவர் பயசின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
இன்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் விபத்தில் உயிரிழந்த குளச்சல் கொட்டில்பாடு ஊரை சேர்ந்த பயஸ் அவர்கள் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார். மேலும் காணாமல் போன ஆரோக்கியம், ஆன்றோ ஆகிய இரண்டு மீனவர்களின் இல்லங்களுக்கு சென்று மீனவர்களுக்கான தேடல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் இது தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற மீனவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார். காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் மேலும் கடலில் கவிழ்ந்த படகு மற்றும் அதில் பொருத்தப்பட்டிருந்த கருவிகள் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொள்வதாக தெரிவித்தார்.
அவருடன் குளச்சல் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரசேகர், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மீனவரனி தலைவர் ஸ்டார்வின், துணைத்தலைவர் லாலின். மாவட்ட துணைத்தலைவர் தர்மராஜ் மற்றும் பிராக்கிளின், மோகன், அந்திரியாஸ், சிவாஜிபெனடிக், அந்தோணிதாசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்கள் அதிகாரமளிக்கும் தமிழக அரசின் திட்டங்கள் கையேடு வெளியீடு!
திங்கள் 11, டிசம்பர் 2023 8:17:21 PM (IST)

திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.62 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்ட பணிகள் துவக்கம்!
திங்கள் 11, டிசம்பர் 2023 5:42:44 PM (IST)

தடம்புரண்ட சரக்கு ரயில் மீட்பு பணிகள் நிறைவு : ரயில் சேவை மீண்டும் தொடங்கியது!
திங்கள் 11, டிசம்பர் 2023 5:24:19 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கினார்!
திங்கள் 11, டிசம்பர் 2023 3:44:16 PM (IST)

சிசுவின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய பிணவறை ஊழியர் சஸ்பெண்ட்!
திங்கள் 11, டிசம்பர் 2023 3:38:08 PM (IST)

பொதுமக்களை தாக்கிய திமுக எம்எல்ஏவை கைது செய்க! -ராமதாஸ் வலியுறுத்தல்!!
திங்கள் 11, டிசம்பர் 2023 12:51:31 PM (IST)
